திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர், கல்லூரி மாணவர், பள்ளி மாணவி உள்ளிட்டோருக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலர் ஜெயலட்சுமி துவக்க உரையாற்றினார். துணைத் தலைவர் சந்தானகிருஷ்ணன்,பொருளாளர் பொறிஞர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் லால்குடி முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
எழுத்தாளர் ஜனனி அந்தோணி ராஜ் மலர்ந்தும் மலராத மனசு தலைப்பிலும், திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி வேதியியல் துறை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் சந்துரு சிலம்பின் நீதி தலைப்பிலும், லால்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி நேகா ஸ்ரீ முத்தமிழ் காவலர் தலைப்பிலும் பேசினார்கள். சிறப்பு சொற்பொழிவாற்றியவர்களுக்கு திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் பாராட்டு சான்றிதழ் நினைவு பரிசாக நூல்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக இணைச் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்க நிறைவாக கோபாலசாமி நன்றி கூறினார். திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற ஆலோசகர்கள் முது முனைவர் பசுபதி, கவிஞர் மாரிமுத்து, அரிமா முகமது ஷபி, செயற்குழு உறுப்பினர்கள் கேசவன், குணசீலன், பன்னீர்செல்வம், நாகப்பன், துரை வெங்கடேசன், தமிழ் ஆசிரியை சித்ரா, சுஜாதா, சஞ்சய் குமார் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்