அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் அரியலூர் ஏ ஐ டி யு சி தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்
தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர் மகேந்திரன் சி ஐ டி யூ மாவட்ட செயலாளர் துரைசாமி ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் டி தண்டபாணி மற்றும் சிஐடியு ஆர் ரவீந்திரன் ஏ ஐ டி யு சி து பாண்டியன் உட்பட எச் எம் எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்திய நாட்டின் விவசாயிகளை உழைக்கும் மக்களை காக்க பொதுத்துறை நிறுவனங்களையும் பொதுச் சேவைகளையும் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்திட புதிய தாக்குதலான மின் திருத்த மசோதா 2025ஐ திரும்பப் பெற்றிட மோடி அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள வரைவு தொழிலாளர் கொள்கை சிரம் சக்தி நிதி 2025ஐ ரத்து செய்திட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரியலூர் அண்ணா சிலை அருகில் வருகிற 26 11 2025 அன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது