நிலத்தை மீட்டு தர கோரி மாற்றுத்திறனாளி குடும்பத்தினர்
தர்ணா-துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரப்பரப்பு
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22/11/2025) காலையில் 10 மணியளவில் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு பரபரப்பு காணப்பட்டது.
துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி ஊராட்சி ஜீவா நகரில் வசித்து வருபவர் தீனதயாளன் இவர் தனக்கு சொந்தமான இடத்தில் நில அளவையர் மூலம் நிலத்தை அளந்து தனது எல்லையில் வேலி அமைத்துள்ளார்.
அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும்,இதில் நீங்கள் அனுபவிக்க கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அவரிடமிருந்து தங்களை காப்பாற்றி இடத்தை மீட்டு தர வேண்டும் என மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீனதயாளன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டாட்சியர் சிவக்குமார் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.இதனால் அங்கு ஒரே பரபரப்பு காணப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்