இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுதோறும் குடிநீர் வழங்க பைப்லைன் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலைகளை பெயர்த்தெடுத்து பைப்லைன் பதிக்கின்றனர். ஆனால், துரைச்சாமிபுரம், கரையேரப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் பெயர்த்தெடுத்த இடங்களில் முறையாக சீரமைக்கவில்லை. மேடு, பள்ளமாக உள்ளது.

இதன் வழியாக இரு சக்கரவாகனங்கள் செல்வதில் சிரமம் இருக்கிறது. சில நேரங்களில் கற்கள் இடரி விடுவதால் இரு சக்கர வாகனத்தோடு கீழே விழுகின்றனர்.

முதியோர்கள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும், தேவர்நகர், ஆராய்ச்சி நகர் பகுதிகளில் சாலை வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக காணப்படுகிறது.

ஆகையால், சேதமடைந்த சாலையை சீர் செய்யவும், பைப்லைன் இணைப்பிற்கு உரிய பணத்தைப் பெற்றுக் கொள்ளவும், சாலை இல்லாத பகுதிக்கு சாலை அமைக்கக்கோரியும் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதியிடம் பா.ஜ.க., வின் கடலாடி தெற்கு ஒன்றியத்தலைவர், ராஜசேகரபாண்டியன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட மகளிரணி செயலாளர், ஜெயசரஸ்வதி, முன்னாள் மண்டல் தலைவர் சத்தியமூர்த்தி, RSS வட்டார பிரசாரக் ஆனந்தன், ஒன்றிய துணைத்தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் ஒன்றியப் பொதுச்செயலாளர் பத்திரகாளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *