பெரம்பலூர் முன்னாள் தினபூமி நிருபர் இராஜா மறைவிற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி நிதி உதவி வழங்கிய பத்திரிக்கையாளர்கள் பெரம்பலூர். நவ.21. பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த இராஜா என்பவர் பல வருடங்களாக தினபூமி பத்திரிக்கையின் பெரம்பலூர் மாவட்ட நிருபராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று இறந்து விட்டார். இவருக்கு பிரபா என்கின்ற மனைவியும், பிரகாஷ், ராஜ்கிரன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
இறந்த செய்தியை கேள்விப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து இராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தி அவருடைய பிள்ளைகளிடம் ரூபாய் 15,000 நிதியினை வழங்கினார்கள்..