ஆனைமலைஸ் டொயாட்டா 25 வது ஆண்டு விழா கொண்டாட்டம்
வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உயர்தர சொகுசு காரான டொயோட்டா லாண்ட் குரூஸர் அறிமுகம் கார் பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற டொயாட்டா நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்து வரும் கோவை ஆனைமலைஸ் டொயாட்டா தனது 25 வது ஆண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது..
இதன் ஒரு பகுதியாக ஆனைமலைஸ் டொயாட்டா வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஒட்டல் அரங்கில் நடைபெற்றது…
இதில் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்துடன் நீண்ட காலமாக பயணம் பிரீமியம் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் டொயாட்டா நிறுவனத்தின் 25 ஆண்டு கால பயணம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து ஆனைமலைஸ் டொயாட்டா ஊழியர்கள் பேசினர் தொடர்ந்து ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்துடன் தங்களின் அனுபவம் குறித்து வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சொகுசு கார்களின் பிக் டாடி என அழைக்கப்படும் டொயோட்டா லாண்ட் குரூஸர் கார் அறிமுக விழா நடைபெற்றது..
இதில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு புதிய எல்.சி.300 ரக காரை அறிமுகம் செய்தனர் இதே போல டொயொட்டா நிறுவனத்தின் சொகுசு கார்களான கேம்ரி,மற்றும் வெல்ஃபையர் கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன நிகழ்ச்சிக்கு வந்த கார் பிரியர்கள் மூன்று உயர் தர சொகுசு கார்களின் தகவல்கள் குறித்து ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவன ஊழியர்களிடம் கேட்டு அறிந்தனர்..
நிகழ்ச்சியில் ஆனைமலைஸ் குழுமங்களின் தலைவர் காளிசாமி,தலைமை செயல் அதிகாரி யுவராஜன்,சர்வீஸ் பிரிவின் துணை தலைவர் சந்தோஷ் குமார்,விற்பனை பிரிவின் துணை தலைவர் சிவராமன்,உட்பட ஆனைமலைஸ் டொயோட்டா ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்…