குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நடப்பு 2025-26 ஆம் ஆண்டின் சம்பா பருவத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கத்திடல் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அவ்வகையில் கீழூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல்விளக்கத்திடல்களை வேளாண்மை துணை இயக்குநர் அமிர்தராஜ் அவர்கள் ஆய்வு செய்தார். செயல்விளக்கத்திடல் அமைப்பதற்காக மானியத்தில் தொகுப்பாக வழங்கப்பட்ட விதைகள், நுண்ணூட்ட கலவை, உயிர் உரங்கள், அங்கக உரங்கள், நானோ யூரியா, இலை வண்ண அட்டை ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஆய்வின்போது குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மலர்வண்ணன், வேளாண்மை அலுவலர் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர் சத்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலநாதன், பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் சுபாஷ் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.