செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் ரவுண்டானா அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காருடன் 250 கிலோ பான்பரா குட்கா பொருட்கள் சிக்கியது.
மாதவரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தராஜ் ஆகிய இருவரும் அதிகாலை 5 மணி அளவில் மாதவரம் ரவுண்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது வேகமாக வந்த தெலுங்கானா மாநில TS 28 G 3534 என்ற எண் பதிவு எண்கொண்ட மாருதி சுசுகி பிரெசன் காரை என்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
போலீசார் சோதனை செய்தபோது அதிலிருந்து ஓட்டுநரும் மற்றும் ஒருவரும் அங்கிருந்து நைசாக தப்பித்து ஓடிவிட்டனர். அவர்களை துரத்தி பிடிக்க போலீசார் முயன்றும் பிடிக்க முடியவில்லை. அதன்பின் பிடிப்பட்ட காரையும் குட்கா பொருட்களையும் மாதவரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர்
இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரையும் அதிலிருந்து 260 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து இது எங்கிருந்து கடத்தப்பட்டு வந்தது எனவும் இந்த பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது எனவும் காரின் உரிமையாளர், ஓட்டுநர் யார் ? என்ற விவரங்களை சேகரித்து வருகின்றார்.