மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் செயல்பட்டு வரும் வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்க மனவளக்கலை அறக்கட்டளையில் மனைவி நல வேட்பு விழா தலைவர் சி. என். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு வேதாத்திரி மகரிஷி அருளிய மனைவி நலவேட்பு குறித்து கூறிய கவிதை வரிகளையும் அருட்காப்பு வரிகளையும் சத்திய பிரமாணமாக ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியை பேராசிரியர் முத்து சங்கர் நடத்தி வைத்தார். விழா ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கோமதி பிரசாத் ஏற்பாடு செய்திருந்தார். நிறைவாக நாகரத்தினசாமி நன்றி கூறினார் நிகழ்ச்சியில் 50 தம்பதியர் உட்பட மன்ற நிர்வாகிகள். பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்