தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் தமிழ் துறை ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார் .
உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் ஆ. முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பயனடையுமாறு நல்ல கருத்துள்ள விஷயங்களை கூறி சிறப்பு யுரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் பேசும் போது மாணவிகள் போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது வினா கேட்கும் முறைகள் கடின உழைப்பு முழு ஈடுபாட்டுடன் தேர்வுக் குரிய பாடத்திட்டத்தை முறையாக படித்து அரசுத் தேர்வுகளில் அபார வெற்றி பெற்று எதிர்காலத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உயர்ந்த பணியில் அமர வேண்டும் என்று மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கிப் பேசினார் இந்த நிகழ்ச்சியில் தமிழ் துறை மற்றும் பிற அனைத்துத் துறை சார்ந்த மாணவிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தமிழ் துறை உதவிப் பேராசிரியர் பொ. சங்கீதா நன்றி உரையாற்றினார்