தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர்மன்ற கவுன்சிலர் கம்பம் சாதிக் இவர் உத்தம பாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பால சண்முகம் அவர்களை சந்தித்து மனு அளித்தார் மனு விவரம் எனது கம்பம் நகராட்சி 11 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான கம்பம் தாத்தப்பன் குளம் முகைதீன் ஆண்டவர் புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு விதவை உதவி தொகை மற்றும் முதியோர் உதவி தொகை ஏராளமானோர்களுக்கு கடந்த ஒரு மாதமாக கிடைக்கவில்லை அவர்களுக்கு மீண்டும் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அரசு உதவி தொகையை வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை கழித்து வரும். அப்பாவி ஏழை எளிய மக்களுக்கு தங்கள் கருணை கூர்ந்து உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் சண்முகம் அவர்கள் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தமிழக அரசின் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.