நாமக்கல்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மீது தமிழக மக்கள் வைத்த நம்பிக்கையை காக்கும் வகையில் சொன்னதையும், சொல்லாததையும் 2 ஆண்டுகளிலேயே தமிழக முதல்வர் 85 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார் . இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது இன்னும் பலவற்றை இந்தியாவிற்கே எடுத்து காட்டாக செய்யவுள்ளார் நாமக்கல் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் பேச்சு

நாமக்கல்லில் இன்று இரவு நாமக்கல் கிழக்கு நகர திமுக செயலாளர் செ. பூபதி தலைமையில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது

இதில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் பேசினார்

அப்போது அவர் பேசும்போது :-

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மீது தமிழக மக்கள் வைத்த நம்பிக்கையை காக்கும் வகையில் சொன்னதையும், சொல்லாததையும் 2 ஆண்டுகளிலேயே தமிழக முதல்வர் 85 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார் . இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது இன்னும் பலவற்றை இந்தியாவிற்கே எடுத்து காட்டாக செய்யவுள்ளார் என்று குறிப்பிட்ட அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன்

திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான், மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம், விவசாயிகளுக்கு தனி நிதிநிலை அறிக்கை, விவசாய பயன்பாட்டுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கி வருவதாகவும், ஆட்சிக்கு வந்த போது 62 ஆயிரம் கோடி கடன் நிதி பற்றாக்குறை இருந்த நிலையில் முதல்வரின் சிறந்த நிர்வாகத்தால் கடனை 30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாகவும், கடன் குறித்து முதல்வர் துணிச்சலாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டார், என்றும்
2 ஆண்டுகளில் கல்லூரி சேர்க்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது,

வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்க உள்ளதாகவும், அரசு பணிகளில் 40 சதவீதம் பணியை பெண்களுக்கு இந்த அரசு வழங்கி வருவதாகவும்
தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் பேசினார்

முன்னதாக திமுக பொது குழு உறுப்பினர் டாக்டர் .மாயவன் திமுக தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள்
கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed