வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
கனமழை அறிவிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
திண்டுக்கல்லுக்கு கனமழை அறிவிப்பு எதிரொலியாக 10 தீயணைப்பு நிலையங்களில் மீட்பு பணிக்கு தேவைப்படும் பொருள்களோடு 200 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மக்கள் மழை பாதிப்புகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை உடனடியாக மீட்கும் வகையில் திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்துார், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மீட்பு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளில் யாரேனும் சிக்கினால் 94450 86325ல் 24 மணி நேரமும் அழைக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.