கழுகுமலையில் மேல பஜார் பகுதியில் முப்பம் தரத்து இசக்கியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 8 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது.
அதனைதொடர்ந்து 9 மணியளவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர் காலை 10.30 மணியளவில் கோவில் முன்பு கால்நாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
வருகிற 23 ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து 9.30 மணியளவில் தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பின்னர் இரவு தீர்த்த சாம் பூஜை நடக்கிறது. வரும் 25 ம் தேதி மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி சேகர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.