S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
புதுச்சேரி மாநிலம்: காரைக்கால் தக்களூர் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது அறிவியல் படைப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
கண்காட்சியை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் பாராட்டினர்.
கண்காட்சியில் இடம்பெற்ற அறிவியல் படைப்புகளை ஆசிரியர்கள் குமரவேல், ரங்கபாஸ்யம், ஸ்ரீகணேஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்து பார்வையிட்டு, சிறந்த அறிவியல் படைப்புகளைத் தேர்வு செய்தனர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியைகள் கிருத்திகா, கலைச்செல்வி, சிவரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.