மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை யகம் அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடை பெற்றது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த னர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் சரவ ணக்குமார், உதவி இயக்குனர் புஷ்ரா சற்குணம், உதவி செயற் பொறியாளர் குரு பாக்கியம், இளநிலை பொறியாளர் அருண்குமார் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

பல்வேறு வகையான வண்ண மீன்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி மீன்வளர்ப்பு மற்றும் பொழுது போக்கு அம்சமாக வும், தொழில் ரீதியான வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் இந்த வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை கூடம் அமைக்கப்படுகிறது.

சுமார் 5 ஆயிரம் சதுரடியில் 2 தளங்களுடன் கொண்ட 100-க்கும் மேற்பட்ட மீன் தொட்டி களில் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உள்ள மீன் காட்சியகத்தில் சுறா, திருக்கை உள்ளிட்ட 40-க்கும் அதிகமான கடல் மீன்களும், ஆஸ்கர், டிஸ்கஸ் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் வண்ண மீன்களும் காட்சிப்படுத்தப் படும்.

இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் விழிப்புணர்வுக்காகவும், அலங்கார மீன்கள் சார்ந்த கல்வி அறிவு பெறவும், பொழுது போக்கிற்காகவும் செயல்படுத்த இருக்கிறோம். இது வெளிநாட்டு தொழில் நுட்பங்களை கொண்டு நவீன சுத்திகரிப்பு உபகர ணங்களை பயன்படுத்தி இயக்கப்படும் முதல் அரசு வண்ண மீன் காட்சியகம் ஆகும்.

மேலும் தனியாக இயங்க கூடிய அவசர மற்றும் மீன் உயிரி காக்கும் கூடமும் இதில் அடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்க ளிடம் கூறும் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மீன்வள கல்லூரியும், தென்காசி மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியும் கேட்டு கோரிக்கை வருகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

ரூ.52 கோடியில் கூடுதாழை, கூட்டப்பனை யில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.

2-ம் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி யான கொளத்தூர் உள்ளது. விரைவில் இதனை முதலிடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும்.

தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் கடலில் அடிக்கடி மோதி கொள்ளும் சம்பவங்களை தடுக்க ரோந்து படகு கேட்டு கோரிக்கை வந்துள்ளது. விரைவில் கடலோர காவல் படையினருக்கு ரோந்து படகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம், தி.மு.க.வின் ‘பி’ டீமாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளதாக அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் கூறி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வம் காலாவதியானவர் என்று கூறி சென்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *