திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்.A. ஏழுமலை தலைமையில். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அனுப்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் கிஸ்கால் பழைய இரும்பு உருக்கும் ஆலை கடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையானால் கடுமையான சுற்றுச்சூழல் மாசு காரணமாக அனுப்பட்டு ஊர் பொதுமக்களுக்கு நுரையீரல் தொந்தரவு. சுவாச கோளாறு. புற்றுநோய் நோய். எதிர்ப்பு சக்தி இன்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கரும்புகை பயிர் நிலத்தில் படிவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து இயக்கம் உரிமை பெறாமல் இயங்கி வருவதை. அரசாங்கம் உடனடியாக இரும்பு ஆலையை மூட வேண்டும். மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் மற்றும் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் 3 சமூக போராளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் வழக்கு பதிவு செய்ததையும் கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் . மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன். மாநில இளைஞரணி செயலாளர் செஞ்சி ரமேஷ். மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ். மாவட்ட அமைப்பு செயலாளர் நடராஜன். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் முனி ராஜன். கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கோபி. மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பாலா. தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் கீழ்பெண்ணாத்தூர் அவை தலைவர் பெருமாள். மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்உட்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு பேரணியாக நடந்து சென்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் அவரிடம். பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் மற்றும் பொய் வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அழைத்தனர் இந்த கோரிக்கை மனுவினை டிஐஜிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *