திருச்சி: பன்னாட்டு வன்முறையற்ற தினத்தை முன்னிட்டு, லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன் ஆகிய சங்கங்கள் சார்பில் உறுதிமொழி ஏற்பு விழா திருச்சியில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் தலைவர் ஹேமலதா, லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டாரத் தலைவர்கள் சரவணன், சுப்பிரமணி, சரவணகுமார், இயற்கை மருத்துவர் கௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,“பன்னாட்டு வன்முறையற்ற தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தை வன்முறையற்ற வழியில் முன்னெடுத்துச் சென்ற மகாத்மா காந்தியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அறிவித்தது.கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு மூலம் வன்முறையற்ற கொள்கையைப் பரப்புவதும், உலகளவில் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்” என்றார்.சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கலை மற்றும் கலாச்சார மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மகாத்மா காந்தியின் உண்மை, அமைதி, அகிம்சை ஆகிய கொள்கைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.தொடர்ந்து, “மகாத்மா காந்தியின் கொள்கைகளான உண்மை, அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றை என் வாழ்வில் கடைப்பிடிப்பேன். எந்தவொரு சூழ்நிலையிலும் வன்முறையை நாடாமல், சகிப்புத்தன்மையுடனும் பேச்சுவார்த்தை மூலமாகவும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பேன்” என அனைவரும் உளமாற உறுதிமொழி ஏற்றனர்.வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *