நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் முட்டாஞ்செட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலைச்செல்வி, உதவி பொறியாளர் (AE) தலைமை வகித்தார். கூடுதல் செயலாளர் வினோத்குமார், தவெக முட்டாஞ்செட்டி ஊராட்சி செயலாளர் எம். கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாடு, குடிநீர் பைப் லைன் பிரச்சினை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர் முறையாக பதில் அளிப்பதில்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், ஊராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை வர இருப்பதாக கூறப்படுவது குறித்தும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

முட்டாஞ்செட்டி பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவமனையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கடிதம் அளித்து, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆதிதிராவிடர் மயானம் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதனை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பதிவு செய்யப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *