தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து கொன்றைக்காடு வழியாக பட்டுக்கோட்டைக்கு மெயின் சாலை செல்கிறது. எனவே தென்னங்குடி அருகே சாலை ஓரத்தில் அரசு மதுபான கடைகள் இரண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த சாலையில் இரவு பகல் என எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக செயல்படுகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் சாலை இருளில் மூழ்கி விடுகிறது. இரவு நேரங்களில் மனபானகடையை நோக்கி வருபவர்கள் கடை மூடி விடுவார்களோ என மது பிரியர்கள் மது வாங்க வாகனங்களில் அதிவேகமாக செல்கின்றனர்.
இதனைப் போல மது வாங்கி அருந்தியவர்கள் போதைதலைக்கேறிய பின்பு தனது வாகனத்தில் ஏறி வேகமாக சாலையை நோக்கி வருகிறார்கள் இதனால் சாலையில் போக்குவரத்தில் உள்ளவர்கள் மீது மோதி விடுகிறார்கள். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையில் மின் விளக்குகள் அமைத்து விபத்துகள் நடக்கா வண்ணம் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.