நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரிடம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்டத்தில் கோவில்வெண்ணி ஊராட்சியில் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டிதர வேண்டும் என கோரிக்கை வைத்துப் பேசினார் பள்ளிக்கு ரூ.66.70 லட்சம் மதிப்பீட்டில் மூன்று புதிய வகுப்பறை கட்டிடம் தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.66.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மூன்று புதிய வகுப்பறைக் கட்டிடம் கொண்ட கட்டடத்தினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்துவைத்து குத்துdவிளக்கேற்றினார்.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனசந்திரன் முதன்மை கல்வி அலுவலர் , அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனசந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.