செங்கல்பட்டு மாவட்டம் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருக்குடை ஊர்வலம் அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை திருக்குடைகள் சமர்ப்பண டிரஸ்ட் மூலம் ஸ்ரீ அண்ணாமலையாருக்கு திருக்கடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து திருக்குடைகள் புறப்பட்டு நேற்று மாலை 5 மணி அளவில் அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழு பொறுப்பாளர் அச்சிறுப்பாக்கம் எஸ்.செல்வம் வஜ்ரகிரி மகான் வடபாதி ஆதீனம் சித்தர் சுவாமிகள்ஆகியோரின் தலைமையில் திரைப்பட இயக்குனர் ஏ.சி.சௌந்தர் முன்னிலையில் திரு குடைகளுக்கு கைலாய வாத்தியங்கள் முழங்க பிரம்மாண்ட
வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் தீபக், பிரிங்கிமலை சரவணன் ரவிராம் தங்க மாளிகை ரவிச்சந்திரன் வழக்கறிஞர் பிரபாகரன் ஆசைத்தம்பி மற்றும் அச்சிறுப்பாக்கம் கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் வியாபார பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல குழுவினர் செய்திருந்தனர்.