தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா, வெங்கடசமுத்திரம் 4 ரோடு அருகே இயங்கி வரும் அரசு மதுபான கடையை அகற்ற கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து வட்ட செயலாளர் கிருஷ்ணவேணி தலைமையில் இன்று மாலை கொட்டும் மழையில் ஆர்பட்டம் நடத்தினர்,
தருமபுரி – பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் வெங்கடசமுத்திரம் 4 ரோட்டில் அமைந்துள்ள இந்த மதுபான கடையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருவதுடன், அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவிகள் மற்றும் அருகில் உள்ள கார்மென்ட்சில் வேலை செய்யும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருவதாகவும் மேலும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் இங்கு செயல்படும் மதுபானகடையை உடனே அகற்ற வேண்டும் என கொத்து மழையையும் பார்க்காமல் மாதர் சங்கத்தினர் ஆவேசத்தோடு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்திய மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.