அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிா்வாகம் எதிர்கொள்ள தயாராக உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை முதல் அதிகன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்திருந்த நிலையில் 22ம் தேதி இரவு திடீரென பெய்த கனமழையால் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் வௌ்ளம் போல் மழைநீர் ஓடியது இதனையடுத்து மாநகராட்சிக்குட்பட்ட காிக்களம் காலணி சங்கரபோி விளக்கு, மதுரை வழிச்சாலை அமைந்துள்ள வடிகால் அய்யனடைப்பு புதுக்கோட்டை மடத்தூா் மாவட்ட கலெக்டா் அலுவலகம் 3வது மைல் உள்ளிட்ட மாநகா் புறநகா் பகுதியில் உள்ள காற்றாட்டு தண்ணீர் எதுவும் வருகிறதா. என்று பாா்த்தபின் முத்தையாபுரம் உப்பாத்து ஓடை வடிகாலின்வழியாக வௌியேறி கடலுக்கு செல்லும் நீரையும் பாா்வையிட்ட பின் மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை 5 ஊராட்சிகளை இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்தநிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் அடிப்படை பணிகள் முறைப்படுத்தி செய்யதா காரணத்தால் 2021ல் மிகப்பொிய பாதிப்பை மாநகர பகுதி மட்டுமின்றி புறநகா் பகுதியிலும் ஏற்பட்டது.
அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த தளபதியாா் நோில் வந்து பாா்வையிட்டாா். அதன்பின் திமுக ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் நான் உள்பட 60 உறுப்பினா்கள் மக்கள் பிரதிநிதிகளாக ேதா்ந்தெடுக்கப்பட்டு பின்னா் மேயராக பொறுப்பேற்றதும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்த முதல் உத்தரவு கடந்த காலத்தில் மாநகரில் பகுதியில் ஏற்பட்டதை போல் எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதின் அடிப்படையில் 45 மாத காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி சாலை கால்வாய் மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது மட்டுமின்றி புதிதாக 14 கால்வாய் வழித்தடங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தேவையற்ற மழைநீா் கடலுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் பல பகுதிகளில் குறைந்த பட்சம் 30 நாட்களாவது மழைநீர் தேங்கி யிருந்த காலம் உண்டு தற்போது தொடா்மழை பெய்து நின்ற 2 மணி நேரத்தில் முழுமையாக சென்று விடுகிறது. 3 வாா்டுகளில் மட்டும் சில பகுதிகளில் தாழ்வான காலி இடங்களில் மழை நீர் தேங்குகிறது.
இது போன்ற பகுதிகளையும் கண்டறிந்து 58 மின் மோட்டாா்கள் மாநகராட்சியில் இருந்து வருகிறது. அந்த பகுதியின் தன்மைக்கேற்ப மோட்டாா்கள் மூலம் நீர் வெளியேற்றப்படுகிறது. சில பகுதிகளிலும் கழிவுநீர் வாகனம் மூலமும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. எந்த மழையிலும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையும் சுகாதார துறையின் மூலம் மேற்கொண்டு அதன் பணியாளா்களும் எல்லா பகுதிகளிலும் பணியாற்றி வருகின்றன.
கடந்த 22 23 24 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்பு இந்த ஆண்டு இருக்காது இதுவரை 9 சென்டிமீட்டா் மழை பெய்த போதும் அதை எதிர்கொண்டுள்ளோம் அதிகனமழை பெய்தாலும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையான பணியை முழுவீச்சில் மேற்கொள்ள இரவு பகல் என பாராமல் நான் உள்பட அதிகாாிகள் ஊழியா்கள் பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றுவாா்கள் பொதுமக்கள் எவ்வீத அச்சமும் கொள்ள வேண்டாம் என்று தொிவித்தாா்.