திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு , கதை,கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் த. இந்திரஜித் தலைமை வகித்தார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் தமிழ் செம்மல் கவிஞர் கோவிந்தசாமி வரவேற்புரையாற்றினார். குறள் தலைப்பில் நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம்.ஏ.அலிம், அம்மா கவிதை
தலைப்பில் கவிஞர் கவி.செல்வா, அப்பா தலைப்பில் ஆங்கரை பைரவி கதையும்,
கவிஞர் கோ.கலியமூர்த்தி சமகால இலக்கியங்கள் தலைப்பிலும்
பேசினர்.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கசிறப்பு தலைவர் அரிமா சௌமா.இராஜரெத்தினம் சிறகு பதிப்பகம் வெளியிடும் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் கட்டுரை தொகுப்பு நூலினை வெளியிட திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம்
அமைச்சர் பெ.உதயகுமார் முதல் பிரதியை பெற்று கொண்டார்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் பொதுச்செயலாளர் எழுத்தாளர் வை.ஜவகர் ஆறுமுகம், சங்க துணைத்தலைவர் சூர்யா சுப்பிரமணியன்,கவிஞர் பொறியாளர் மு.சுப்பையா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலாசிரியர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஏற்புரையில், தமிழர் பண்டைய புழங்கு பொருட்களில் வேளாண் புழங்கு பொருட்களில் ஏர் கலப்பை, மண்வெட்டி, களைக்கொத்து, கமலை, கதிர் அருவாள், முறம், சுலகு, படி, பக்கா, மரக்கால், ஒத்த தட்டு தராசு, குதிர், பத்தாயம், அன்றாட புழங்கு பொருட்களில் உரல், உலக்கை, குந்தாணி, கல் உரலும், மர உரலும், மண் திருகை, கல் திருகை, ஆட்டுக்கல்லும் குழவியும், கல்வம், அம்மியும் குழவியும், அரிக்கேன் விளக்கு, வெண்கல கும்பா,தூக்குவாளி, திருக்குச்செம்பு, சுரக்குடுவை, குழிப்பணியாரக்கல் சட்டி, பாதாள கரண்டி,தேங்காய் துருவி, மத்து, அப்பக்கூடு, காய்கறி கூட்டுத் தூக்கு, குடம், கங்காளம், பித்தளை அண்டா,அச்சு முறுக்கு கருவி, முறுக்கு கருவி, வெற்றிலைப் பெட்டி, பணிக்கம்,பாக்கு வெட்டி, எழுத்தாணி, மரப்பாச்சி பொம்மை, வளரி, சிக்குவாரி, அகப்பை, இளவட்டக்கல், பல்லாங்குழி சமய சடங்கு பொருட்களில் காமாட்சி அம்மன் விளக்கு, வலம்புரி சங்கு,குங்குமச்சிமிழ், சந்தன கிண்ணம், பூஜை மணி, பஞ்ச பாத்திரம், பித்தளை தூபக்கால், முக்காலி, பாரம்பரிய விளையாட்டு பொருட்களில் தாயம், ஆடுபுலி ஆட்டம், பரமபத விளையாட்டு, கிட்டிபுல், பம்பரம், சதுரங்கம், முதுமக்கள் தாழி உள்ளிட்ட கட்டுரையினை தொகுத்துள்ளேன்.
நவநாகரீக உலகில் அறிவியல் வளர்ச்சியாலும் தொழில்நுட்ப புரட்சியாளும் புழங்குப் பொருட்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றன. அவ்வகையில் பாரம்பரிய புழங்குப் பொருட்களை இல்லத்திலேயே புழங்குப் பொருட்கள் காட்சியமாக வைத்துள்ளோம். அது மட்டுமின்றி பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், அறிவார்ந்த சமூகத்திற்கு இலவச நூலகம், காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு ஆதரவுற்று அனாதையாக இறந்து உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் மயான பூமியில் மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனாவுடன் நல்லடக்கம் செய்து வருகிறேன்.
வாழும் வரை குருதிக்கொடை வாழ்நாளிற்கு பிறகு. படமாய் இருப்பதைவிட பாடமாய் இருப்போம் என உடல் தானத்திற்கு திருச்சி கிஆபெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்து உள்ளேன் என்றார்..நிறைவாக அரிமா பா.முகமதுஷபி நன்றி கூறினார்.