கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள், சென்னை கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கழிவு நீர் லாரிகளின் டயர்களில் காற்றை இறக்கி விட்டு நூதன முறையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு விடப்படுகிறது.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி லாரிகளின் டயர்களில் இருந்து காற்றை இறக்கி நூதன முறையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சேகரிக்கப்படும் திருமழிசையில் கொண்டு செல்ல நேர விரயம் மற்றும் பணம் விரயும் ஆவதால் இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாவதாகவும்,
எனவே அரசு உடனடியாக கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர் சீனிவாசன்.