.தாம்பரம் அடுத்த ஜி கே எம் பொறியியல் கல்லூரியில் மாணவருடன் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் எம்எல்ஏ முனைவர். சௌமியா அன்புமணி

சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஜி.கே.எம் பொறியியல் கல்லூரியில் 26 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பசுமைதாயகம் அமைப்பின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் சவுமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டபடிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக பசுமையை பாதுகாக்க வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய சவுமியா அன்புமனி,

பூமியில் குடிப்பதற்கு உகந்த நன்னீர் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளதோடு
இந்தியா முழுவதும் நல்ல தண்ணீர் பற்றாகுரை ஏற்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் நல்ல தண்ணிரில் சாக்கடை கலப்பதாலும், குப்பை எரிக்கபடுவதாலும் காற்று நிலம் நீர் ஆகிய மூன்றும் பெருமளவு மாசடைந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் பொறியியல் மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு பசுமை, சுற்று சூழல் மற்றும் நீர் வளத்தை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என அறிவுருத்திய அவர்,

உலகத்தில் 97 விழுக்காடு கடல் நீராக இருப்பதால் நல்ல தண்ணீர் மிக குறைவாகவே உள்ளது என்றும் இதனை பாதுகாத்து தண்ணிர் பிரச்சினையை சரி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு பொறியியல் மாணவர்களுக்கு உண்டு என்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் சுஜாதா பாலசுப்ரமணியம், முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *