அரியலூரில் பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்கூட்டம்

பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் பெகன்ஜி மாயாவதி அவர்களின் ஆணையின் படி அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது

அரியலூர் மாவட்ட தலைவர் சா.சின்னதுரை தலைமை தாங்கினார்அரியலூர் சட்டமன்ற தொகுதி தலைவர் வி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று பேசினார் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஆடையூர் எஸ் ராஜ் முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளர் கே நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பி காமராஜ் மாநில துணைச் தலைவர் கீனோஸ்ஆம்ஸ்ட்ராங் மாநில செயலாளர் இடும்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ் முருகானந்தம் அரியலூர் மாவட்ட துணைத்தலைவர் அய்யம்மாள் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன் பாலசுப்பிரமணியன் குருமூர்த்தி மலையப்பன் செந்தில்குமார் பகவதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் அரியலூர் நகர தலைவர் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *