தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகு | ஜந்தர் மந்தரில் போராட்டம்!
சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் எம். ஏ. பேபி, டெல்லி காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டபோது கொடூரமாகத் தாக்கப்பட்டார் இதனை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, சிதம்பரம், காட்டு மன்னார்குடி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நெய்வேலியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் கண்ணன் மாவட்ட செயலாளர் கோ மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார் திருவரசு மாவட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ஜெயராமன்,குமரகுரு, மேரி,மாதவி,ஏழுமலை, கிருஷ்ணன், இளங்கோவன், அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஞானஷ்குமார் பணிநீக்கம் செய்ய கோரி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது..