திருச்சி மாநகர காவல்துறை – காந்தி மார்க்கெட் காவல்நிலையம், ஆத்மா மனநல மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன்,JCI திருச்சி, அக்னி சிறகுகள் அமைப்பு சார்பில்
உலக மனநல தின விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி திருச்சி காந்தி சந்தை மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக காந்தி மார்க்கெட் சரக உதவி ஆணையர் சபாபதி பங்கேற்றார்,
காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் விஜய், பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ரவி, பிரேம்குமார், இருதயராஜ் தலைமை காவலர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனைதலைமை மனநல மருத்துவர் கே. ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலில் ஆத்மா மனநல மருத்துவமனை சமூக மன நல ஆலோசகர் கரன் லூயிஸ், மனநல ஆலோசகர் அஸ்வினி,மக்கள் தொடர்பு துறை சகாயராஜ் பீர்முகமது புவனேஸ்வரன்,லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் பேராசிரியர் ஹேமலதா, சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் கையெழுத்திட்டனர்.
உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நன்னாளில் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கம் மிக முக்கியமான ஒரு விழிப்புணர்வு அங்கமாக மாறியுள்ளது.
கையெழுத்து இயக்கத்தின் நோக்கமானது மனநலம் என்பது வெறும் உடல்நலம் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் ஒட்டுமொத்த நல்வாழ்வைத் தீர்மானிக்கும் காரணியாகும். ஆனால், இன்றும் சமுதாயத்தில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது ஒரு அவமானமாக அல்லது தயக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தயக்கத்தை உடைத்து, “மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஆதரிக்கிறேன்”, “மனநலப் பாதிப்புக்குள்ளானவர்களைப் பாரபட்சமின்றி நடத்துவேன்” மற்றும் “சுய மனநலனில் அக்கறை கொள்வேன்” என்று ஒவ்வொரு தனிமனிதனும் உறுதிமொழி ஏற்பதன் அடையாளமே இந்த கையெழுத்து இயக்கமாகும். அதனடிப்படையில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு பெரிய வெள்ளைப்பதாகையில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, அதில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கையெழுத்தைப் பதித்தனர்.
இது வெறும் ஒரு கையெழுத்தாக இல்லாமல், பின்வரும் நன்மைகளைச் சமூகத்தில் ஏற்படுத்துகிறது. மனநலம் குறித்துத் திறந்தவெளியில் பேசவும், அதுகுறித்த விவாதங்களை உருவாக்கவும் இது தூண்டுகோலாக அமைகிறது.நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்ற நேர்மறைச் செய்தியை மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இக் கையெழுத்துகள் உணர்த்துகின்றன. ஒரு தற்காலிக நிகழ்வாகத் தொடங்கி, இது மக்களின் சிந்தனையில் நிரந்தர மாற்றத்தை விதைக்கிறது.
“உடல் நலத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை மன நலத்திற்கும் தருவோம்” என்ற உன்னத நோக்கத்தை அடித்தளமாகக் கொண்ட இந்த கையெழுத்து இயக்கம். உலக மனநல தினத்தில் நாம் இடும் ஒரு கையெழுத்து, ஆரோக்கியமான, அன்பான மற்றும் மன அழுத்தமில்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுப் பொறுப்பின் அடையாளமாகும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்