கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பொது நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் தைமூர் ருஷ்த மோவிஷ் மற்றும் ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பற்றி ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் (Study Abroad Educational Consultants) நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு சாலையில் உள்ள தனியார் அரங்கில் செய்தியாளர்கள் சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்

இது குறித்து பேசி அவர்கள்

2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளதாகவும் இந்த மருத்துவ படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன் மே 19ஆம் தேதியில் அவிநாசி சாலையில் உள்ள ரத்னா ரிஜென்ட் ஹோட்டலில் நடைபெறும் என தெரிவித்தார்.இந்த கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி பொறியியல் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் மட்டுமல்லாது,பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் இளநிலை பட்டங்களும் ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கும் என தெரிவித்தார்.

தேசியத் தகுதி நுழைவுத் தேர்வில் நீட் தேர்ச்சி பெற்ற 12ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் எஸ்சி எஸ் டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொறுத்தவரை குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% மட்டுமே ரஷ்ய மருத்துவத்தில் இளநிலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்பிபிஎஸ் பிஇ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் சேருவதற்கு சி இ டி.மற்றும் .ஐ இ எல் டி எஸ் போன்ற முன் தகுதி தேர்வுகள் தேவை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

ஆங்கில வழியிலான படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் மற்றும் படிக்கும் ஊரைப் பொறுத்து படிப்பு கட்டணம் ஆண்டுக்கு 3500 முதல் 6000 அமெரிக்க டாலர் வரை செலவாகும் இருந்தாலும் கடந்த காலங்களைப் போலவே ரஷ்யா அரசாங்கத்தின் வருடாந்திர உதவித் தொகை திட்டமொழியாக இந்த ஆண்டும் 100 இந்திய மாணவர்களுக்கு 100% உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை முதுநிலை பட்ட மேற்படிப்பு திட்டங்களை இலவசமாக அவர்கள் படிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *