மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம். 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்பு.
செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்
அயனாவரம் தெய்வநாயகம் என்பவர் மாதவரம் பஸ் டெப்போ அருகே சுமார் 2170 சதுர அடி கொண்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் உணவகம் நடத்தி வந்தார்.
அந்தப் பகுதி நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்தது இதனால் நெடுஞ்சாலை துறையினர் உயர் நீதிமன்றத்தில் இதனை அகற்ற வழக்கு தொடங்கினர் .
அதன்படி உயர் நீதிமன்ற உத்தரவின்படி
இன்று காலை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல் துறையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அந்த இடத்தை இடித்து அகற்றினார் .
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது . ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு 2 கோடியே 20 லட்சம் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.