மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கருவி அருகே சங்கிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இதன் வழியே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணிக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து சவுட்டு மண் லாரி மூலம் எடுத்து வந்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராம மக்கள் சாலை அமைக்கும் பணிக்கு கொட்டப்படும் மண்ணானது கடல் கரை ஓரங்களில் எடுக்கப்பட்ட உப்பு மண்ணாகும்.
ஏற்கனவே நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது நிலங்களை கெடுத்த நிலையில் சாலை ஓரம் மீதமுள்ள இடங்களில் இந்த உப்பு மண்ணை கொட்டுவதன் மூலம் இருபுறமும் உப்பு நீர் இறங்கி தங்களது விலை நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால்,சுற்று சூழல் மற்றும் தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது என கூறி போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து உப்பு மண் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்திற்கு சௌந்தரராஜன் தலைமை வகித்தார். சீனிவாசன்,வெங்கடேஷ் ராஜமுத்தையா, சங்கர், வைத்தியநாதன், மூர்த்தி,மாரிமுத்து,குணசேகர், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மேலும் கிராம மக்கள், சாலையோர வீட்டு மனை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.