அறிவியலும் – சமுதாயமும், கருத்தரங்கம்
மாவட்ட செய்தியாளர் முஹம்மது இப்ராகிம்
செங்கோட்டை -மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள தமிழ்க்குமரன் தோட்டத்தில் வைத்து எதிர்கால சமூகம் ஓர் அறிவார்ந்த சமூகமாக பரிணமிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பரந்துபட்ட அறிவியல் பார்வை சிந்தனைகளை விதைக்கும் முயற்சியாக” அறிவியலும் – சமூகமும் ” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கலைச்செல்வி, ஸ்ரீதர் , முப்புடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆசிரியர் ஐயப்பன் வரவேற்றார் கடல்சார் ஆராய்ச்சியாளர் , பெண்ணியலாளர், குழந்தைகளுக்கான எழுத்தாளர் , சூழலியல் ஆர்வலர் முனைவர். நாராயணி சுப்ரமணியன் கருத்தாளராக பங்கேற்று எது அறிவியல்? பரிணாம வளர்ச்சி, பாலின சமத்துவம் , பல்லுயிர் பெருக்கம், அன்றாட வாழ்வில் உள்ள அறிவியலை புரிந்து கொள்ள கருத்துரை வழங்கி உரையாடினார் கருத்தரங்கு இயற்கை சூழலில் நடைபெற்றது.
ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் ஆசிரியர் பிச்சைக்கனி , தலைமை ஆசிரியர் மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார். தமிழாசிரியர்
காளிராஜ் மதிப்பீடு செய்தார்.
ஆடிட்டர் மாரியப்பன், ஆசிரியர்கள் ராஜ் சுதாஸ், மாடக்கண்ணு , சிவா, முனைவர் நடராஜன் , பிரபு உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொறுப்பாளர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.