கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம்நாத் நேரில் சந்தித்து கரூர் வெண்ணைமலை கோயில் நில பிரச்சனை காரணமாக பெண்கள் படும் இன்னல் மற்றும் போராட்டம் குறித்தும் எடுத்துக்கூறினார்.
உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
பெண்கள் முன்னெடுத்து போராடுவதால் பசுமை தாயகத்தின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி-யிடம் மனு அளிக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர் பசுமை தாயகத்தின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணியை சந்தித்த கரூர் கொங்கு பிரேம் நாத் வெண்ணைமலை மக்களின் இன்னல்களை எடுத்துக் கூறி மனு அளித்தார். மனுவை பெற்ற முனைவர்அன்புமணி செளமியா வெண்ணைமலை மக்களின் நில பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என கூறி மனுவை பெற்று கொண்டார்.