மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ஆம் தேதியில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதையொட்டி 3-ஆம் தேதி மாலை வடசென்னையில் தி.மு.க. தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ஆம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதுடன் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார். இதன் பிறகு ஜூன் 20-ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்துவதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., இவர்களுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன் முத்துராமலிங்கம், திருச்சி சிவா, கும்மிடிப்பூண்டி வேணு, குத்தாலம் கல்யாணம், பூச்சி முருகன் மற்றும் 23 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியன்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜனாதிபதி பங்கேற்கும் 5-ந் தேதியன்று விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *