கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வேம்பன்பட்டி,சுந்தம்பட்டியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா. கோடை காலத்தில் தங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று வாசிக்க வேண்டும் என அறிவுரை..

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை தலைமை ஆசிரியர் கலையரசி, வேம்பன் பட்டி நடுநிலைப்பள்ளி நடைபெற்ற ஆயிரம் அறிவியல் திருவிழாவில் புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் வேம்பன்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமஜெயம் அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு கல் கல்வியாளர் சீனிவாசன், புதுப்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவை பார்வையிட்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய போது

மாணவர்கள் கோடைகாலத்தில் உள்ள விடுமுறை நாட்களில் தங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும் எனவும்,ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அதற்கான வாய்ப்புகளை இல்லம் தேடிக் கல்வி மையம் கோடை காலத்தில் வழங்கிறது.

என்றும்,மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கே தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இல்லம் தேடி கல்வி செயலியில் எல்.கே.ஜி யு.கே.ஜி ஒன்றாம் வகுப்பு புதிய சேர்க்கும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்ற வேண்டும் என பேசினார்.

இல்லம் தேடி கல்வி மைய த்தில் நடைபெறும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், ஓரிகாமி மூலம் தொப்பி செய்தல் ,
படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்திருந்தனர்.மாணவ மாணவிகள் உற்சாக காகித மடி கலை மூலம் தொப்பி செய்து மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் உமா ,காளியம்மாள், ராஜலட்சுமி, சித்ரா, காஞ்சனா, ஷாலினி, பானுமதி, புவனேஸ்வரி, வான்மதி, முருகேஸ்வரி, செந்தமிழ் லட்சுமி, அகிலா, கலைச்செல்வி, மணிமொழி, சரிதா, பூங்கொடி, ஜெயக்குமாரி, வினோதினி,வீரமுனியம்மாள், ராஜலட்சுமி, ஐஸ்வர்யா, கோகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *