ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே வந்த பொழுது திடீரென டயர் வெடித்து டீசல் டேங்க் தீப்பற்றி எரிந்தது. மிகவும் பரபரப்பான மக்கள் நடமாடும் பகுதியில் பலத்த சத்தத்துடன் லாரி திடீரென தீ பிடித்து லாரி எரிந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ,கிரானைட் கல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே வந்தது.. அப்போது லாரி பின்பக்க டயர் திடீரென வெடித்து டீசல் டேங்க் தீப்பற்றி எரிந்தது. மிகவும் பரபரப்பான மக்கள் நடமாடும் பகுதியில் பலத்த சத்தத்துடன் லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால், அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
லாரிக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. லாரி உரிமையாளர் ராமச்சந்திர நாயுடு வயது 57 சித்தூர் டிரைவர் சரவணன் வேலூர் 45 இருவரும் லாரி இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பால் மடை பகுதியை சேர்ந்த நரசிம்மா 55 மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் இந்த லாரியின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தால், எரியும் டீசல் இவர்களது வண்டிமேல் விழுந்தது.
இதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது .
இதில் கணவன், மனைவி இருவரும் லேசான காயத்துடன் தப்பித்து வெளியேறினார்கள். திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *