திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்கடையில் வேலை செய்யும் சரோஜா, நேற்று இரவு பணி முடிந்து பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது, பின்னால் வந்த மர்ம பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கிலியை பறித்துச் சென்றார். அவரது கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மர்மப் பெண்ணைப் பிடித்து மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து.