கோவை மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மல்லையன் எக்ஸ்போ மாணவர்கள் தங்களது பல்வேறு பாடத்திட்டங்கள் தொடர்பான படைப்புகளை காட்சி படுத்தி அசத்தல்
கோவை மதுக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதோடு மாணவர்களின் பல்வேறு தனித்திறன்களை ஊக்குவித்து வருகின்றனர்..
இதன் ஒரு பகுதியாக மல்லையன் எக்ஸ்போ எனும் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது மாணவர்களின் அறிவியல் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களில் உள்ள தனித் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக நடைபெற்ற இந்த கண்காட்சி 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது…
முன்னதாக கண்காட்சி துவக்க விழாவில், பள்ளி தாளாளர் சண்முகம் மற்றும் மனோன்மணி சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினா்..
இதில்,சந்தோஷ் மல்லையா மற்றும் விஜயலட்சுமி சந்தோஷ் மல்லையா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர்..
எல்.கே.ஜி.முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் பங்கு பெற்ற கண்காட்சியில் சோலார் மின் உற்பத்தி,திடக்கழிவு மேலாண்மை,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,இயற்கை பேரழிவுகளில் முன் கூட்டி அறியும் தொழில் நுட்பம், ,கட்டிட கலையில் தமிழர்களின் பங்கு,ஆரோக்கிய உணவுகள், ரோபோட்டிக் என பல்வேறு தகவல்கள் அடங்கிய காட்சி மாதிரிகளை மாணவ,மாணவிகள் காட்சி படுத்தினர்..
மாணவர்களின் இந்த கண்காட்சியை ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பார்வையிட்டனர்..
இறுதி நிகழ்வாக பள்ளி முதல்வர் ரேகா மணிகண்டன் கண்காட்சியில் பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து நன்றி கூறினார்….