அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மாற்றுத் திறனாளி பதவியேற்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் தமிழக அரசு ஆணைக்கிணங்க மாற்றுத்திறனாளிகளின் ஒருவரான எம் செந்திலை பேரூராட்சி மன்ற புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு புதிய உறுப்பினர் பதவி ஏற்பு விழா பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் என்.இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற புதிய உறுப்பினராக எம் செந்திலுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜீவராஜ் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்