திருவாரூர் அருகே நீலக்குடியில் சர்தார் வல்லபாய் படேல் 150ஆவது பிறந்தநாள் விழா. இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட மை பாரத் கேந்திரா மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இணைந்து சர்தார் 150 பாத யாத்திரை நவம்பர் 25 அன்று திருவாரூர் நீலக்குடி கேந்திர வித்யாலயா பள்ளியின் நுழைவு வாயிலிலிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி சுமார் எட்டு கி.மீ பாதயாத்திரை சென்று மத்திய பல்கலைக்கழக எம். ஆர். அரங்கில் நிறைவடைந்தது. பேரணியில் தேசிய ஒற்றுமை சுய சார்பு மற்றும் போதைப் பொருள் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஆகிய கருத்துக்கள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் இந்தியா ஒன்று இந்தியா ஒன்றுபட்டது
இந்தியா என்றென்றும் ஒற்றுமையாக இருக்கும் என்ற அவரது உறுதியான நம்பிக்கையை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர். பேரணியில் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கே. பாலசண்முகம் வரவேற்றார்.மத்திய பல்கலைக்கழக பதிவாளர் ஆர். திருமுருகன் கேந்திர வித்தியாலயா முதல்வர் எஸ். வல்லப்பன் மத்திய பல்கலைக்கழக பினான்ஸ் அதிகாரி ஜி. ஆர். கிரிதரன் மத்திய பல்கலைக்கழக கண்ட்ரோலர் ஆப் எக்ஸாமினேஷன் சுலோச்சனா சேகர் மை பாரத் கேந்திரா துணை இயக்குநர் எம். திருநீலகண்டன் நன்னடத்தை அலுவலர் வெங்கட்ராமன் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என்.நடராஜன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மத்திய பல்கலைக்கழக செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீபிரபஞ்ச் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் டி.கே. வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர். மை பாரத் கேந்திரா திட்ட அலுவலர் ஆர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். பேரணியில் சுமார் 400 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும் வினாடி வினா கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒற்றுமை பேரணிக்கு முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் திரு உருவப்படத்திற்கு பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.