செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தை புதியதாக மாற்றி அமைக்க கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் அருகில் நாரவாரி குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடம் இயங்கி வருகிறது .
இந்து சமுதாய நலகூடத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில்,பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறைகளும் சில கடைகள் இயங்கி வருகிறது ஆனால் அதற்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருவதால் மின்சார வாரிய அதிகாரிகள் முன்னரே இணைப்பை துண்டித்துள்ளனர்.
இந்தக் கடைகளுக்கும் கட்டண கழிப்பறைக்கும் மின்சாரம் இல்லாததால் அருகில் உள்ள
சமுதாய நலக்கூடத்தில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அனுமதியும் இல்லாமல் தனியார் சிலர் அந்த சமுதாய கூடத்தில் இருந்து திருட்டுத்தனமாக வயர்களைக் கொண்டு மின் இணைப்புகளை கள்ளத்தனமாக கொடுத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்
இது விபரம் அறிந்த நாரவாரி குப்பம் பேரூராட்சி கவுன்சிலர்கள், மற்றும் பொதுமக்கள் இது குறித்து உடனே மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சமுதாய நலக்கூடத்தில் உள்ள மீன் பெட்டியில் இருந்து கள்ளத்தனமாக எடுக்கப்படும் மின்சார இணைப்பை உடனே துண்டித்தனர்.
அரசுக்கு இழப்பை ஏற்படும் விதத்தில் பல வருடங்களாக கள்ளத்தனமாக நடைபெற்ற இந்த மின்சார இணைப்பினால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டினர்.
மேலும் பேரூராட்சியில் தலைவர் பதவி வகிக்கும் தமிழரசி குமார் என்பவரின் கணவர்தான் இச்செயலில் உறுதுணையாக இருந்துள்ளார் . என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசும்போது மின்சார ஊழியர்கள் எதுவும் தெரியாதது போல் மௌனம் காத்தனர்.
சட்ட விரோதமாக கள்ளத்தனமாக மின்சார இணைப்பை கொடுத்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.