நாமக்கல்

இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த இந்திய பாராளுமன்ற முதல் உறுப்பினர்களில் ஒருவரான சுதந்திர போராட்ட தியாகி டி. எம் காளியண்ணன் இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல்-பரமத்தி-மோகனூர் சந்திப்பு சாலை அருகே அனுஷ்டிக்கப்படுகிறது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி பங்கேற்றுடி. எம் காளியண்ணன்
திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் இதில் டாக்டர் செந்தில், பி ஏ. சித்திக், மோகன் உள்ளிட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்

இதை தொடர்ந்து நாமக்கல் கரூர் சாலையில் உள்ள கொங்கு நாட்டு வேளாளர் திருமண தகவல் மையத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த திருச்சி வேலுசாமி , டி என் காளி அண்ணன் இந்திய அரசியலமைப்பு அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த ஒருவர்

இவர் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையில் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் நிறைவேற்றுவதற்கு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களுக்காக அரசியல் அமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் அன்றைய பிரதமர் நேரு இதுகுறித்து தமிழகத்தில் தான் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது ஆகவே தமிழக காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவருக்கு உதவியாக அன்றைய அமைச்சராக இருந்த கக்கன் நாமக்கல்லை சார்ந்த டி.எம். காளியண்ணன் இவர்கள் மூவர்களையும் அழைத்து அந்த பிரச்சனை குறித்து பேசியது அன்றைய பிரதமர் நேரு இவ்வாறான மிகவும் முக்கியமாக கருதப்பட்ட டி. எம். காளியண்ணன் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் நினைவு கூறுவது இளம் சமூகத்தினருக்கு வரும் சந்ததியினர் டி. எம். காளியண்ணன் மாதிரியான மூத்தவர்கள் வழியை பின்பற்ற அவர் வரலாற்றை எடுத்துச் சொல்ல நாம் தவறக் கூடாது என்பதை நினைவு கூறும் வகையில் தான் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தப்படுகிறது என்று திருச்சி வேலுசாமி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *