தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 410 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 410 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்
இந்த கூட்டத்தில்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இராமகிருஷ்ணன் பொது தனித்துணை ஆட்சியர் ச.பா.தி. கவிதா மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் கதிர்வேல் உதவி ஆணையர் கலால் பஞ்சாபகேசன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் லெ. பாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.