ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பறையப்பட்டி புதூரில் நீண்ட நாட்களாக குடிநீர் வசதி இன்றி தவித்து வந்த கிராம மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கிவைத்தார் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார்,
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, அரூர் அதிமுக நகர கழக செயலாளர் ARSS பாபு, அதிமுக நிர்வாகிகள் பிவி. செல்வம்,அ.சம்பத் பச்சையப்பன் ,செல்வராஜ் சீனிவாசன் ,கலைவாணி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.