புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், முறைகேடுகள் நடை பெறுவதாக சுயேட்சை நேரு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். மேலும் தலைமை செய லகத்தை சமூக அமைப்பினர் மற்றும் தனது ஆதரவாளர்க ளுடன் சென்று முற்றுகை யிட்டார். பின்னர், கம்பன் கலைய ரங்கில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்ற அரசு விழாவில் கேட் ஏறி குதித்து சென்று அங்கு அதிகாரிக ளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக மறுத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அனைத்தும் நேர்மையாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது என்பது எனது கருத்து. ஒப்பந்த புள்ளிகளும் வெளிப்படையாக உள்ளது. தலைமைச் செயலர் இதற்கான வழிமுறைகளை நேர்மையாக நடத்தி வருகிறார். முன்பு, ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகள் அதிகம் தாமதப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அவற்றை விரைவுபடுத்த கூறி வருகிறேன். மத்திய அரசின் வழிகாட்டு முறை கடந்த ஆட்சியில் பல முறை ஒப்பந்தபுள்ளி மறுக்கப்பட்டு தாமதப் படுத்தப்பட்டது. அந்தந்த நேரத்திற்குள்ளாக முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் முடிக்கப் படாமல் இருந்தது. அவற்றை விரைவுப்படுத்த தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி வருகி றோம். அனைத்தும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ப தற்காக மத்திய அரசின் வழிகாட்டு முறையை பின்பற்றப்படுகிறது. மற்றொன்று இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மை நிதி இந்த ஜூன் மாதத்தோடு முடிவ டைய இருந்தது. அதனால் நமக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் நின்று விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு வேண்டும் புதுவை பலனடைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் யாரும் அவநம்பிக்கையோடு இருக்கக் கூடாது. தவறுகள் இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும். மறைக் கப்படாது. தாமதப்படுத்தப் பட்டவை எல்லாம் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. நிறுத்த வேண்டிய சூழலில் இருந்தவை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் நேர்மறையான வளர்ச்சிகள். தவறுகள் நடைபெறுவது தெரிந்தால் அதற்கான விசாரணை அமைப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை. இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *