காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், மாநில விஜிலென்ஸ் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிகரில் கைது செய்யப்பட்டா சோனியை, பின்னர் அமிர்தசரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2016 மற்றும் 2022 க்கு இடையில் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக சேர்த்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு அக்டோபர் 10, 2022 அன்று உத்தரவிடப்பட்டது. 2006ம் ஆண்டு ஏப்ரல் 1, முதல் மார்ச் 31, 2022 வரை, முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் 4.5 கோடி என்றும், அவர் 12.5 கோடி செலவு செய்துள்ளதாகவும் புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த காலகட்டத்தில், ஓபி சோனி தனது மனைவி சுமன் சோனி மற்றும் மகன் ராகவ் சோனி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளார். விசாரணையைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விஜிலன்ஸ் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *