ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சார்லஸ்ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு டி.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ்ரெங்கசாமி இவர் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார் அரசுக்கும் அரசு துறை அதிகாரிகளுக்கும் ஊராட்சி ஒன்றியங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்

இது குறித்து இன்று அவர் தெரிவித்துள்ளது…

அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நேரடி கள ஆய்வு மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அனைத்து நிலை பணியாளர்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளது ஊரக வளர்ச்சித் துறையில் அன்றாட கள ஆய்வு மேற்கொள்ளும் பணியில் இருந்து விலக்களிக்க கோரிக்கை விடுத்துள்ளார்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சார்பாக நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பெரும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் பங்கேற்புடன் மேற்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டது ஊரக வளர்ச்சித் துறையில் அன்றாட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும் மிகுந்த பணி சுமைகளுடன் பணியாற்றி வருகின்றனர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர்கள் முதல் அனைத்து நிலை பணியாளர்களும் கடந்த- 24.07.2023- முதல் 20.08.2023 வரை கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பெறும் இப்பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தனர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களை தற்போது கள ஆய்வு மேற்கொள்ள மேற்படி பணியாளர்களுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டம் பணிகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் போதிய பணியாளர்கள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும் இப்பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் மகளிர் உரிமைத் திட்டம் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு மேற்கொள்ள கூடுதலான பணியினை திணிக்கப்பட்டுள்ளதால் வளர்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றத்தினை கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது மேலும் கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து பணிகளையும் ஒருவரே செய்து வரும் நிலையில் இப்பணிக்கு செல்லும் சூழ்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக நிர்வாகப் பணிகள் முழுமையாக முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

ஆகவே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை பணியாளர்களை கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து பணியிலிருந்து விலக்கு அளிக்க கேட்டுக்கொள்கிறேன் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஒருங்கிணைப்பாளர் சார்லஸ்ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *