கெண்டையம்பட்டி நடுநிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..

கந்தரவக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கொண்டையம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மழைநீர் விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பொறுப்பு சுப்புலட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் முருகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் ரகமதுல்லாமழைநீர் விழிப்புணர்வு குறித்து பேசியதாவது
நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவர் வாக்கிற்கேற்பஇந்த உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாய் விளங்குவது நீர். தாவரங்கள் தனது உணவை உற்பத்தி செய்வதற்கும். விலங்குகளும், பறவைகளும் தாகம் தணிப்பதற்கும் நீர் இன்றியமையாததாய் விளங்குகின்றது.

இத்தகை நீர் பூமிக்கு பலவகைகளில் கிடைத்தாலும் மழை மூலம் கிடைக்கப் பெறுகின்ற நீரே மனிதர்களின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது. ஆகவே இத்தகைய மழைநீரை நாம் அனைவருமே சேமித்து சிக்கனமாக நமது தேவைக்கு பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இப்பூமிப்பரப்பில் காணப்படும் நீரானது மாசடைதலிற்கு உட்படுவதாலும், ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை உறிஞ்சுவதனாலும் அழிவடைகின்றது. இந்நிலை மாறவேண்டுமாயின் மழைநீரை சேமிப்பது அவசியமாகும்.

அத்துடன் மழைநீரை சேமிக்கும் போது அவற்றை பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ளல், கட்டடம் கட்டுதல் போன்றவற்றிக்கு பயன்படுத்தலாம் என்றும், அனைவரும் மழை நீரை சேகரிக்க வேண்டும் என பேசினார். முன்னதாக துளிர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு துளிர் மாத இதழும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பாசிரியர் அறிவழகன், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் மகாலெட்சுமி ,மாதவி, நளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . நிறைவாக ஆசிரியை யசோதா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *